கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்ட சிறையில் காவலரை எட்டி உதைத்த கைதியால் பரபரப்பு ஏற்பட்டது. மங்களூர் சிறையில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் கொள்ளை உட்பட 12க்கும் மேற்பட்ட கடுமையான வழக்கு கைதிகள் கௌசிக் மற்றும் அப்துல் ஃபயான் ஆகியோர் தார்வார் சிறைக்கு மாற்றப்பட்டனர். அங்கு போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த ஜெயிலர் கல்லப்பா சில நாட்களாக சோதனைகளை கடுமையாக்கியதால், ஆத்திரமடைந்த இருவரும், ஜெயிலர் மற்றும் மூன்று சிறைக் காவலர்களை தாக்கினர்.