பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 சிறார்களின் கல்வி செலவை மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஏற்றுக் கொண்டார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு எதிராக ஜம்மு காஷ்மீரில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய குண்டு வீச்சில் அப்பாவி மக்கள் 28 பேர் உயிரிழந்தனர்.
அதில் பூஞ்ச் மாவட்டத்தில் மட்டும் 13 பேர் பலியாயினர். அவர்களின் குழந்தைகள் 22 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்களை ராகுல் காந்தி த த்தெடுத்துள்ள நிலையில்,கல்வி செலவுக்கான நிதியுதவியை வழங்கியுள்ளார்.