உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் டெலிவரி பாய் உடையில் சென்று நகைக் கடையில் பட்டப்பகலில் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
ஹெல்மெட் அணிந்து கொண்டு நகைக் கடைக்குள் புகுந்த இரு கொள்ளையர்கள், துப்பாக்கியை காட்டி ஊழியர்களை மிரட்டி இரண்டு பைகளில் 25 கிலோ தங்கம், 20 கிலோ வெள்ளி நகைகளை அள்ளிச் சென்றனர்.
பட்டப் பகலில் துணிகர செயலில் ஈடுபட்ட கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.