மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறக்கப்படுகிறது.
மலையாள "கருக்கிடகம்" மற்றும் தமிழின் "ஆடி" மாதத்தை ஒட்டி, நாளை மாலை 5 மணிக்கு சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு, யோக நித்திரையில் இருக்கும் ஐயப்பனை தீபம் காட்டி எழுப்பி நிர்மல்ய பூஜை மற்றும் கணபதி ஹோமத்துடன் வழக்கமான பூஜைகள் துவங்கப்படுகிறது.
ஜூலை 21-ஆம் தேதி வரை காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்குப் பிறகு இரவு 10 மணிக்கு "ஹரிவராசனம்" பாடி நடை அடைக்கப்படவுள்ளது.
இதற்காக sabarimalaonline.org.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் "வெர்ச்சுவல் க்யூ" மூலம் பக்தர்களுக்கான ஆன்-லைன் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது.