Commision of india 
இந்தியா

டாக்காவில் இந்திய தூதரகத்திற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்?

வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவிடம் இருந்து தனிமை படுத்தப்படும் என வங்க தேச தலைவர் ஒருவர் மிரட்டல் விடுத்தது

Web Team

டாக்காவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு பாதுகாப்பு மிரட்டல் விடப்பட்டதை அடுத்து, டெல்லியில் உள்ள வங்கதேச தூதர் வெளியுறவு அமைச்சகத்திற்கு வரவழைக்கப்பட்டு அவரிடம் இந்தியாவின் கவலை தெரிவிக்கப்பட்டது. டாக்காவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு எந்த விதமான பாதுகாப்பு மிரட்டல் விடுக்கப்பட்டது என்பது குறித்து இந்தியாவின் சார்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் வங்கதேச தூதர் ரியாஸ் ஹமீதுல்லா வரவழைக்கப்பட்டு இந்தியாவின் கவலை பகிரப்பட்டது. இதற்கு ஒரு நாள் முன்பு, வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவிடம் இருந்து தனிமை படுத்தப்படும் என வங்க தேச தலைவர் ஒருவர் மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.