8 
இந்தியா

ரயில் பயணச்சீட்டு முன்பதிவுக்கான சேவைக் கட்டணம்..

ரயிலில் பயணச்சீட்டை ரத்து செய்யும் பயணிகளுக்கு பணத்தை திருப்பி அளிக்கும் போது முன்பதிவுக்கான கட்டணத்தை பிடித்தம் செய்வதில் மாற்றம் கொண்டு வர ரயில்வே அமைச்சகம் ஆலோசனை செய்து வருகிறது.

Web Team

ரயிலில் பயணச்சீட்டை ரத்து செய்யும் பயணிகளுக்கு பணத்தை திருப்பி அளிக்கும் போது முன்பதிவுக்கான கட்டணத்தை பிடித்தம் செய்வதில் மாற்றம் கொண்டு வர ரயில்வே அமைச்சகம் ஆலோசனை செய்து வருகிறது.

ரயில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யப்படும் போது அதற்கான சேவை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதே சமயம் அந்த பயணச்சீட்டை ரத்து செய்யும் போது சேவை கட்டணம் பிடித்தம் செய்யப்பட்ட பிறகே கட்டணத் தொகை திருப்பி வழங்கப்படுகிறது.

இந்நிலையில், ரத்து செய்யப்படும் பயணச்சீட்டுக்கு சேவை கட்டணத்தை குறைக்கலாமா அல்லது முழுவதுமாக தள்ளுபடி செய்துவிட்டு மொத்த பணத்தையும் திருப்பி வழங்கலாமா என ரயில்வே வாரியம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.