"அர்னாப்" புயலால் 3 விமான நிலையங்களில் சேவை நிறுத்தம் விசாகப்பட்டினம், விஜயவாடா, ராஜமுந்திரி விமான நிலையங்கள்
"அர்னாப்" புயல் காரணமாக, ஆந்திராவில் உள்ள 3 விமான நிலையங்களில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.
விசாகப்பட்டினம், விஜயவாடா மற்றும் ராஜமுந்திரி ஆகிய விமான நிலையங்களில் ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ என அனைத்து விமான சேவைகளும் நேற்று இடைநிறுத்தப்பட்டன.