டெல்லியில் தனது சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சோனியாகாந்தி, இந்திரா காந்தி கோபப்படும்போது தாம் அச்சமடைந்ததாகவும், ராகுல் மற்றும் பிரியங்கா பிறந்த பிறகு அவர் மிகவும் அன்பான பாட்டியாக மாறிவிட்டதாகவும் தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
சுயசரிதை புத்தகத்தை எழுத என்ன காரணம்?
தனது சுயசரிதை புத்தகத்தை எழுதியதற்கான காரணத்தை சோனியா காந்தி தெரிவித்துள்ளார். தனது குடும்பத்தைப் பற்றியும், மாமியார் இந்திரா காந்தி, கணவர் ராஜீவ் காந்தி மற்றும் குழந்தைகளைப் பற்றியும் பல தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும், அவற்றுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் தனது வாழ்க்கை அனுபவங்களைப் இப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளதாகவும் சோனியா காந்தி கூறியுள்ளார்.
உணவகத்துக்கு முன்னாள் காதலியுடன் சென்றேன் - ராகுல்
கேம்பிரிட்ஜில் தனது பெற்றோர் முதன்முதலில் சந்தித்த உணவகத்துக்கு, தனது முன்னாள் காதலியுடன் சென்ற அனுபவத்தை ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார்.
சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், கேம்பிரிட்ஜில் உள்ள 'Varsity Restaurant' உணவகத்துக்கு தனது முன்னாள் காதலியை அழைத்துச் சென்றதாபோது சிக்கன் உணவு ஆர்டர் செய்ததாகவும், அதன் சுவை மிகவும் மோசமாக இருந்ததாகவும் நகைச்சுவையாகத் தெரிவித்தார்.
ராகுல் அருகே முதல்வர் விஜய்
டெல்லியில் சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ராகுல்காந்தி அருகே முதல் வரிசையில் அமர்ந்திருந்தார். விழா அரங்கிற்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய்யை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேரில் வரவேற்று அழைத்துச் சென்றார்.
கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் உடன் சந்திப்பு
சோனியா காந்தியின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் சந்தித்துக் கலந்துரையாடினர்.
மேகதாது அணைத் திட்டம் மற்றும் காவிரி நீர் பங்கீடு தொடர்பாக இரு மாநிலங்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வரும் நிலையில், இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.