Soniya ghandhi 
இந்தியா

சோனியாகாந்தியின் உடல்நிலை சீராக உள்ளது

அவருக்கு ஏற்பட்ட தொற்றுக்கு ஆண்டிபயாட்டிக் மருந்து மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Manigandan Raja

உடல்நிலை சீராக உள்ளது :

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற குழு தலைவருமான சோனியா காந்தியின் உடல் சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சோனியாகாந்தி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவமணை தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,அவருக்கு ஏற்பட்ட தொற்றுக்கு ஆண்டிபயாட்டிக் மருந்து மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.