UP Dog issue 
இந்தியா

கல்லூரி மாணவியை கடித்து குதறிய தெரு நாய்கள் மாணவியின் முகத்தில் 17 தையல்கள் போடப்பட்ட பரிதாபம்

உத்தர பிரதேசத்தின் கான்பூரில் தெரு நாய்கள் கடித்து குதறியதில் படுகாயமடைந்த கல்லுாரி மாணவி முகத்தில் 17 தையல்கள் போடப்பட்டுள்ளன.

Web Team

உத்தர பிரதேசத்தின் கான்பூரில் தெரு நாய்கள் கடித்து குதறியதில் படுகாயமடைந்த கல்லுாரி மாணவி முகத்தில் 17 தையல்கள் போடப்பட்டுள்ளன. 21 வயதான மாணவி வைஷ்ணவி சாஹு, கல்லுாரியில் பி.பி.ஏ., இறுதியாண்டு படித்து வருகிறார். கடந்த 21-ஆம் தேதி, வழக்கம்போல் கல்லுாரி முடிந்து வீடு திரும்பியபோது, தெருநாய்கள் அவரை கடித்து குதறியுள்ளது.