ஜெக்தீப் தங்கரின்திடீர் ராஜினாமா குறித்து மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.
இது குறித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷின் எக்ஸ் தள பதிவில், தங்கரின் ராஜினாவுக்கு பின்னால் ஆழமான காரணங்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
நேற்று பிற்பகல் ஒரு மணிக்கும் மாலை நான்கரை மணிக்கும் இடையே ஏதோ முக்கியமான சம்பவம் நடந்துள்ளதாகவும், அதுவே தங்கரின் ராஜினாவுக்கு காரணமாக இருந்திருக்கலாம் எனவும் ஜெய்ராம் ரமேஷ் பதிவிட்டுள்ளார்.
தங்காரின் பதவி விலகும் முடிவு மத்திய அரசுக்கு முன்கூட்டியே தெரியதா என கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ் மக்களவை துணைத் தலைவர் கவுரவ் கோகாய், நேற்று தங்கார் நடத்திய முக்கிய அலுவல் கூட்டத்தில் மூத்த அமைச்சர்களான நட்டாவும், கிரண் ரிஜிஜுவும் கலந்து கொள்ளாத தற்கும், தங்கரின் ராஜினாமாவுக்கும் தொடர்பு இருக்கிறதா என வினவியுள்ளார்.