சட்டப்பேரவை அல்லது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநரோ, குடியரசு தலைவரோ குறிப்பிட்ட காலத்திற்குள் ஒப்புதல் வழங்கவேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து குடியரசு தலைவர் தரப்பில் தாக்கலான குறிப்பு மீது பதிலளிக்குமாறு மத்திய-மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து விளக்கம் அளிக்குமாறு குடியரசு தலைவர் தாக்கல் செய்த குறிப்பின் மீது, மத்திய-மாநில அரசுகளின் கருத்து என்ன என்பதை அறிய இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கை வரும் 29 ஆம் தேதி தலைமை நீதிபதி BR கவாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகளை கொண்டு அரசியலமைப்பு அமர்வு விசாரிக்க உள்ளது.