ஒரே நாடு ஒரே தேர்தல் 
இந்தியா

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தில் மத்திய அரசு தீவிரம்.. மூன்று மசோதாக்களை நாடாளுமன்றத்தில் கொண்டுவர முடிவு

ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு மத்திய கேபினட் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இது குறித்து 3 மசோதாக்களை மத்திய அரசு கொண்டுவர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Srini Vasan

ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு மத்திய கேபினட் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இது குறித்து 3 மசோதாக்களை மத்திய அரசு கொண்டுவர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் அல்லது பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவற்றில் இரண்டு மசோதாக்கள், மக்களவை, சட்டப்பேரவைகள், மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த வகை செய்யும் அரசியலமைப்பு திருத்தத்திற்கானவை என கூறப்படுகிறது.

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அறிக்கை அளித்த ராம் நாத் கோவிந்த் கமிட்டி, அதற்காக இரண்டு மசோதாக்கள் மூலம் அரசியலமைப்புச் சட்டத்தில் 15 திருத்தங்களை செய்ய வேண்டும் என பரிந்துரைத்தது.