இந்தியாவிற்கு பதிலடி தரும் வகையில் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரியை வெளியேற்றி பாகிஸ்தான் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இரு நாடுகளுக்கிடையேயான தாக்குதல் முடிவுக்கு வந்த போதிலும், தனது வரம்பை மீறி செயல்பட்டதாக பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் இருவரை இந்தியா அடுத்தடுத்து வெளியேற்றி நடவடிக்கை மேற்கொண்டது.
இதற்கு பதில் நடவடிக்கையாக, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் பணியாற்றிய அதிகாரியை வெளியேற்றி பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது. இந்திய அதிகாரி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக பாகிஸ்தான் குற்றம் சுமத்தியுள்ளது.