பாகிஸ்தான் முழுவதையும், இந்திய எல்லைக்குள் இருந்தே தாக்குவதற்கான ஆயுத திறன் நமது ராணுவத்திடம் இருப்பதாக, விமானப் பாதுகாப்பு படையின் இயக்குநர் ஜெனரல் சுமர் இவான் டி’குன்ஹா தெரிவித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை தொடர்ந்து ANI செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், இந்திய ராணுவத்தின் திறன்கள் குறித்து பேசிய அவர், ஒட்டுமொத்த பாகிஸ்தானும் இந்தியாவின் தாக்குதல் வரம்பிற்குள் இருப்பதாக தெரிவித்தார்.
பாகிஸ்தான் தனது ராணுவ தலைமையகத்தை ராவல்பிண்டியில் இருந்து கைபர் பக்துன்க்வா போன்ற தொலை தூர மாகாணத்திற்கு மாற்றினாலும்,தப்பிக்க முடியாது என அவர் தெரிவித்தார்.