Utharakant 
இந்தியா

பிரசித்தி பெற்ற ஸ்ரீபத்ரிநாத் ஆலய நடை அடைக்கப்படுகிறது

ஆலய நடை திறப்பதை ஒட்டி புகழ் பெற்ற சார்தாம் யாத்ரா எனப்படும் நான்கு ஆலய தரிசன யாத்திரையும் துவங்கும்

Web Team

உத்தரகாண்டின் பிரசித்தி பெற்ற பத்ரிநாத் ஆலயத்தின் நடை அடைக்கப்படுவதை ஒட்டி, ஆலயத்தை வண்ண மலர்களால் அலங்கரிக்கும் பணியை ஆலய நிர்வாகம் துவக்கி உள்ளது. இந்த ஆண்டு ஸ்ரீபத்ரிநாத் ஆலயத்தை அலங்கரிக்க ஆயிரத்து 200 கிலோ சாமந்தி மலர்கள் பயன்படுத்தப்படுகிறது. ஸ்ரீபத்ரிநாத் ஆலயத்தின் நடை நாளை பிற்பகல் அடைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல்-மே மற்றும் அக்டோபர் நவம்பர் மாதங்களில் ஸ்ரீபத்ரிநாத் ஆலயத்தின் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.ஆலய நடை திறப்பதை ஒட்டி புகழ் பெற்ற சார்தாம் யாத்ரா எனப்படும் நான்கு ஆலய தரிசன யாத்திரையும் துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.