Carge 
இந்தியா

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 90.40 ஆக படு பாதாளத்திற்கு சென்றுள்ளது.

Web Team

வரலாற்றிலேயே இல்லாத வகையில் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளதை சுட்டிக் காட்டியுள்ள மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே, இந்திய ரூபாய்க்கு உலகில் எங்குமே மதிப்பில்லை என விமர்சித்தார். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,ஒன்றிய பாஜக கூட்டணி அரசின் கொள்கைகள் இந்திய ரூபாயை பலவீனப்படுத்தி விட்டதாக குற்றஞ்சாட்டினார்.

மத்திய பாஜக கூட்டணி அரசின் கொள்கைகள் சிறப்பாக இருந்திருந்தால் ரூபாயின் மதிப்பு உயர்ந்திருக்கும் என்ற கார்கே, நமது பொருளாதார நிலைமை சரியாக இல்லை என்பதை ரூபாயின் சரிந்து வரும் மதிப்பு காட்டுவதாக கூறினார்.அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 90.40 ஆக படு பாதாளத்திற்கு சென்றுள்ளது.