Pani poori protest 
இந்தியா

பானி பூரிக்காக சாலை மறியலில் ஈடுபட்ட பெண் கடைக்காரர் 6 பூரிக்கு பதில் 4 மட்டுமே தந்ததாக தகவல்

சாலையோர கடையில் 20 ரூபாய் கொடுத்து பானிபூரி சாப்பிட்ட பெண்ணுக்கு கடைக்காரர் 4 பூரி மட்டுமே கொடுத்ததாக தெரிகிறது. கூடுதலாக 2 பூரி கேட்டு வாக்குவாதம் செய்த பெண், திடீரென அழுதுக் கொண்டே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

Web Team

குஜராத் மாநிலம் வதோதராவில் 6 பானி பூரிக்கு பதிலாக 4 மட்டுமே கொடுத்ததாக கூறி சாலை மறியலில் ஈடுபட்ட பெண்ணால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையோர கடையில் 20 ரூபாய் கொடுத்து பானிபூரி சாப்பிட்ட பெண்ணுக்கு கடைக்காரர் 4 பூரி மட்டுமே கொடுத்ததாக தெரிகிறது. கூடுதலாக 2 பூரி கேட்டு வாக்குவாதம் செய்த பெண், திடீரென அழுதுக் கொண்டே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், தகவலறிந்து சென்ற போலீசார், அப்பெண்ணை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். ஆனால் கடைசி வரை அவர் கேட்ட
2 பூரி கிடைக்கவே இல்லை என சொல்லப்படுகிறது.