BNG Child attack 
இந்தியா

ஓடிச்சென்று சிறுவனை காலால் எட்டி உதைத்த இளைஞர்

கீழே விழுந்த சிறுவனுக்கு காயம் ஏற்பட்டதையடுத்து, ரஞ்சனை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Web Team

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை எட்டி உதைத்த இளைஞரின் சிசிடிவி காட்சி வெளியாகி பகீர் கிளப்பியுள்ளது.
பனசங்கரி பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டின் வெளியே நீவ் ஜெயின் என்ற சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அதே பகுதியில் வசித்து வரும் ரஞ்சன் என்ற இளைஞன், திடீரென ஓடி சென்று சிறுவனின் பின்னால் எட்டி உதைத்தான். கீழே விழுந்த சிறுவனுக்கு காயம் ஏற்பட்டதையடுத்து, ரஞ்சனை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.