8 
இந்தியா

ஹைதராபாத் ராஜ்பவனில் நடந்தேறிய திருட்டு சம்பவம்.. நான்கு கணினி ஹார்ட் டிஸ்க்குகளை திருடிய நபர் கைது

ஹைதராபாத் ராஜ்பவன் வளாகத்தில் உள்ள சுதர்மா பவனில் நான்கு முக்கியமான கணினி ஹார்ட் டிஸ்க்குகளை திருடிய நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Srini Vasan

ஹைதராபாத் ராஜ்பவன் வளாகத்தில் உள்ள சுதர்மா பவனில் நான்கு முக்கியமான கணினி ஹார்ட் டிஸ்க்குகளை திருடிய நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் மே 13ஆம் தேதி நடந்ததாக கூறப்படும் நிலையில், ஹார்ட் டிஸ்க்குகள் மாயமாகியதை குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இது குறித்து போலீசார் விசாரித்ததில், கணினி மென்பொருள் பொறியாளர் ஸ்ரீனிவாஸ் என்பவர் ஹார்ட் டிஸ்க்குகளை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.

ஹார்ட் டிஸ்க்குகளை கைப்பற்றிய போலீசார் திருடியதற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.