Mumbai car fire 
இந்தியா

சாலையில் தீப்பற்றி எரிந்த காரால் பரபரப்பு

முன்னதாக காரில் சென்றவர்கள் தீ பற்றியதை கவனித்து காரிலிருந்து இறங்கியதால் விபத்திலிருந்து உயிர் தப்பினர்.

Web Team

மும்பையின் பாந்த்ரா-வொர்லி ((Bandra-Worli ))சாலையில் தீப்பற்றி எரிந்த காரால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு கரும்புகையுடன் கொழுந்து விட்டு எரிந்த தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முழுவதுமாக எரிந்து சேதமானது. முன்னதாக காரில் சென்றவர்கள் தீ பற்றியதை கவனித்து காரிலிருந்து இறங்கியதால் விபத்திலிருந்து உயிர் தப்பினர். தீ விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது .