தீபாவளிக்கு மறுநாள் பாரம்பரிய கல் எறியும் விழா இரு குழுக்களாகப் பிரிந்து கற்களை வீசிக்கொண்ட மக்கள் காயமடைந்தவரின் ரத்தம் பத்ரகாளி அம்மனுக்குப் படைக்கப்படும்
இமாச்சலப் பிரதேசத்தின் தாமி கிராமத்தில், தீபாவளிக்கு மறுநாள் பாரம்பரிய கல் எறியும் திருவிழா நடைபெற்றது.
சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்த நிகழ்வில், இரு குழுக்களாகப் பிரிந்து கிராம மக்கள் கற்களை வீசிக்கொண்டனர்.
இதில் காயமடைந்தவரின் சில துளி ரத்தம், பத்ரகாளி அம்மனுக்குப் படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
பழங்காலத்தில் இருந்த மனிதப் பலிக்கு மாற்றாக இந்த வழக்கம் உருவானதாக நம்பப்படுகிறது.