ஆக்ரா 
இந்தியா

தாஜ்மஹாலுக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பியபோது சோகம்

பள்ளி பேருந்தின் பின்புறம் லாரி மோதியதில் 4 மாணவர்கள் பலி சாலையோரம் நிறுத்தி இருந்த பள்ளி பேருந்து மீது லாரி மோதியது

Manigandan Raja

உத்தரப் பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பள்ளி பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 4 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும், 24 மாணவர்கள் உட்பட 32 பேர் காயமடைந்தனர்.

கெளசாம்பி நகரில் செயல்படும் தனியார் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட 50 பேர் தாஜ்மஹாலுக்கு சுற்றுலா சென்றுவிட்டு பள்ளி பேருந்தில் ஊர் திரும்பினர். கன்னௌஜில் பகுதியில் லக்னெள - ஆக்ரா விரைவு சாலையின் ஓரமாக பள்ளி பேருந்தை நிறுத்தி இருந்தபோது, பின்னால் அதிவேகமாக வந்த லாரி மோதியது.