பெங்களூருவில் உணவு டெலிவரி பாய் மீது இருவர் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இருசக்கர வாகனத்தில் சென்ற உணவு டெலிவிரி பாய் எதிரே இருசக்கர வாகனம் வருவதை பார்த்ததும் நிறுத்திய நிலையில், அவ்வழியாக வந்த இரண்டு பேர் மோதிவிட்டு தகராறில் ஈடுபட்டனர். அப்போது இருவரும் சேர்ந்து தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து பொதுமக்கள் தட்டி கேட்டதால் அங்கிருந்து தப்பி சென்றனர்.