PM Modi 
இந்தியா

நாட்டின் நலனுக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும்

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Manigandan Raja

அரசியல் கட்சிகள் ஒன்றிணைய பிரதமர் மோடி அழைப்பு

  • நாட்டின் நலனுக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். தொகுதி மறுசீரமைப்புடன் தொடர்புடைய மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தீபாவளி பண்டிகை முடியும் வரை போராட்டம் இல்லை

  • தீபாவளி பண்டிகை முடியும் வரை போராட்டம் நடத்தப்போவது இல்லை என கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே அறிவித்துள்ளார். மேலும், டெல்லியில் 30 அடி உயரமுள்ள கரப்பான்பூச்சி உருவபொம்மை எரிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த அவர், இலவச விளம்பரத்துக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற காவல் நீட்டிப்புக்கு எதிராக மனு தாக்கல்

  • நீதிமன்ற காவல் நீட்டிப்புக்கு எதிராக காக்ரோச் ஜனதா கட்சி நிர்வாகிகள் சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா மனு தாக்கல் செய்துள்ளனர். தொடர்ந்து சட்டவிரோதமாக தடுப்புக் காவலில் வைத்துள்ளதாகவும், உடனடியாக வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறும், டெல்லி உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.