2027 உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைக்க தயாராக இருப்பதாகவும், ஆனால் அது கண்ணியமான கூட்டணியாக இருக்க வேண்டுமென்றும் காங்கிரஸின் உத்தரப்பிரதேச பொறுப்பாளர் ராஜேந்திரபால் கௌதம் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 20-ஆம் தேதிக்குள் ஒப்பந்தம் இறுதியாக வேண்டும் எனத் தெரிவித்த அவர், உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் வலுவடைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.