கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் இருக்கை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், டெல்லியில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் முக்கிய ஆலோசனை மேற்கொண்டனர். கர்நாடக முதலைமைச்சராக சித்தராமையாவே தொடர்வாரா அல்லது டிகே சிவக்குமார் புதிய முதல்வராக பொறுப்பேற்பாரா என ஓரிரு நாட்களில் தெரியப்படுத்த காங்கிரஸ் தலைமை முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இன்று நடைபெறும் காங்கிரஸ் உயர்மட்ட கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியும் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.