tody gold rate 
news

ஒரு சவரன் தங்கம் ரூ.1,17,200

ஒரு கிராம் தங்கம் ரூ. 14,650

Azhagiri Arumugam

சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 17,200 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

மார்ச் 17 இன்றைய தங்கம் விலை
சென்னையில் இன்று காலை 22 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராமுக்கு 60 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 14,650 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கம் விலை சற்று குறைந்த நிலையில் வெள்ளி விலை கிலோவுக்கு 4 ஆயிரம் ரூபாய் அதிகரித்தது. ஒரு கிராம் 280 ரூபாய்க்கும், கிலோ வெள்ளி 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மார்ச்-11 தங்கம், வெள்ளி விலை
ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்தது. ஒரு சவரன் ஒரு லட்சத்து 20,960 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 15,120 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 300 ரூபாய்க்கும், ஒரு கிலோ மூன்று லட்சம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மார்ச்-12 தங்கம், வெள்ளி நிலவரம்
ஒரு சவரனுக்கு 1,200 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 19,760 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் ஒரு கிராமுக்கு 150 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் 14,970 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 290 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 90,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மார்ச்-13 தங்கம், வெள்ளி விலை
ஒரு சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 19,200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 70 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 14,900 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 290 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 90,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மார்ச் 14 விலை சரிவு
ஒரு சவரனுக்கு ஆயிரத்து 120 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 140 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் 14 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் குறைந்தது. ஒரு கிராம் 280 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மார்ச் 16 விலை
மார்ச் 16ஆம் தேதி, காலை வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.50 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,710க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,17,680க்கும் விற்பனை ஆனது. வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.4 குறைந்து, ஒரு கிராம் ரூ.276க்கு விற்பனை ஆனது. ஒரு கிலோ பார் விலை கிலோவுக்கு ரூ.4,000 குறைந்து, ஒரு கிலோ ரூ.2,76,000க்கு விற்பனை ஆனது.

ஒரு சவரன் தங்கத்தின் விலை நிலவரம்...
11 மார்ச் - ரூ.1,20,960
12 மார்ச் - ரூ.1,19,760
13 மார்ச் - ரூ.1,19,200
14 மார்ச் - ரூ.1,18,080
16 மார்ச் - ரூ.1,17,680
17 மார்ச் - ரூ.1,17,200 இன்றைய விலை