மத்திய பிரதேசம் சாகர் பகுதியில் டிரக்கில் இருந்து 12 கோடி ரூபாய் மதிப்பிலான ஐபோன்கள் திருடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹரியானாவில் இருந்து சென்னை நோக்கி வந்த டிரக்கில்,12 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆயிரத்து 600 ஐபோன்கள் கொள்ளையடிக்கப்பட்டதாகவும், டிரக்குடன் சென்ற பாதுகாவலருக்கு இதில் தொடர்பு இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக சாகர் மண்டல காவல் கண்காணிப்பாளர் பிரமோத் வர்மா கூறினார். மேலும் இது தொடர்பாக குழுக்கள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.