நாடு முழுவதும் சுமார் 17 லட்சம் மாணவர்கள் எழுதிய சிபிஎஸ்இ ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியானது.
இந்த தேர்வு கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதியன்று நிறைவடைந்தது.
இன்று வெளியான முடிவுகளில் 88.39 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், CBSE +2 தேர்வில் தேர்ச்சி விகிதம் 0.41 சதவீதம் அதிகரித்துள்ளது.
மண்டல வாரியான தேர்ச்சி விகிதத்தில் விஜயவாடா, திருவனந்தபுரத்திற்கு அடுத்தப்படியாக சென்னை இடம்பிடித்துள்ளது.