74 
news

39 வயது ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக 19 வயது சாரா அர்ஜுனா? .. கொந்தளிக்கும் நெட்டிஸன்ஸ்

பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் இயக்குனர் ஆதித்யா தரின் இயக்கத்தில் தனது அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் ரன்வீருடன். சஞ்சய் தத், ஆர்.மாதவன் மற்றும் அர்ஜுன் ராம்பால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.

Srini Vasan

பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் இயக்குனர் ஆதித்யா தரின் இயக்கத்தில் தனது அடுத்த படத்தில் நடிக்க உள்ளார்.

இப்படத்தில் ரன்வீருடன். சஞ்சய் தத், ஆர்.மாதவன் மற்றும் அர்ஜுன் ராம்பால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.


இந்த படத்திற்கான அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான நிலையில் இப்படம் தொடர்பான புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

அதன்படி, இப்படத்தில் ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக 19 வயதான சாரா அர்ஜூன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வாராத சூழலிலும் இந்த தகவல் ரசிகர்களிடையே பேசு பொருளாகி உள்ளது.

அதன்படி ரசிகர் ஒருவர். ரன்வீர் சிங் நடிப்பில் உருவான "பேண்ட் பாஜா பாராத் வெளியானபோது சாராவுக்கு 5 வயது' என்றும் மற்றொருவர் '19 வயதான ஒருவர் 39 வயதுடையவருக்கு ஜோடியா??! இது சரி என்று எப்படி நினைத்தார்கள்' என்றும் விமர்சித்து வருகின்றனர்.