32 
news

200 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தங்கள் கையெழுத்து... வளைகுடா நாடுகளுக்கு சென்றுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டிரம்பின் கத்தார் பயணத்தில் 200 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

Srini Vasan

அமெரிக்க அதிபர் டிரம்பின் கத்தார் பயணத்தில் 200 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

4 நாள் பயணமாக வளைகுடா நாடுகளுக்கு சென்றுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் ரியாத் நகரில் நடந்த உச்சி மாநாட்டில் கலந்த கொண்ட பின் கத்தார் சென்றார்.

அங்கு அமீர் ஷேக் தமிம் பின் ஹமத் பின் கலீபா அல் தானி உடனான சந்திப்பின் போது, இரு தலைவர்களின் முன்னிலையில் அமெரிக்காவை தளமாகக் கொண்ட போயிங் நிறுவனத்துடன்,

200 பில்லியன் டாலர் மதிப்பில்160 ஜெட் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தம் கையெழுத்ததானது.

அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையே செயற்கை நுண்ணறிவு ஒத்துழைப்பை ஆழப்படுத்தும் ஒப்பந்தமும் கையெழுத்து ஆனதாக அமெரிக்க வர்த்தகத் துறை தெரிவித்துள்ளது.