3 
news

செவ்வாய் கோளில் 300 கோடி ஆண்டு பழமையான கடற்கரை.. சீன விண்வெளி நிறுவனத்தின் ஜூராங் ரோவர் கண்டுபிடிப்பு.. பழமையான கடற்கரை படிமம் குறித்து மேலும் ஆய்வு

செவ்வாய் கிரகத்தில் 300 கோடி ஆண்டுகள் பழமையான கடற்கரை படிமங்கள் இருப்பதை சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் அனுப்பிய ஜூராங் ரோவர் கருவி கண்டுபிடித்துள்ளது.

Srini Vasan

செவ்வாய் கிரகத்தில் 300 கோடி ஆண்டுகள் பழமையான கடற்கரை படிமங்கள் இருப்பதை சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் அனுப்பிய ஜூராங் ரோவர் கருவி கண்டுபிடித்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கு தேவையான நீர், ஆக்சிஜன், மண் உள்ளிட்ட புவியியல் அமைப்புகள் இருக்கிறதா? என்ற ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில்,

300 கோடி ஆண்டுகள் பழமையான கடற்கரை படிமம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, தண்ணீர் இருப்பதை மேலும் உறுதி செய்வதாக அமைந்துள்ளது.

ஆனால், இந்த கடல் நீர் பூமியில் உள்ளது போன்று உப்புத்தன்மை கொண்டதா?, அல்லது மனிதர்கள் குடிக்கும் தண்ணீர் போன்றதா என்பது உறுதி செய்யப்படவில்லை.