45 
news

4 மாடி கட்டடம் சரிந்து விழுந்து விபத்து - 2 பேர் பலி .. 23 மணி நேரமாக நடைபெற்ற மீட்பு பணிகள் நிறைவு

பஞ்சாப் மாநிலம் மொகாலியில் அடுக்குமாடி கட்டடம் சரிந்து விழுந்த இடத்தில் 23 மணி நேரமாக நடைபெற்ற மீட்பு பணிகள் நிறைவடைந்தன.

Srini Vasan

பஞ்சாப் மாநிலம் மொகாலியில் அடுக்குமாடி கட்டடம் சரிந்து விழுந்த இடத்தில் 23 மணி நேரமாக நடைபெற்ற மீட்பு பணிகள் நிறைவடைந்தன.

சனிக்கிழமை மாலை நேரத்தில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில், இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயது பெண் உயிரிழந்த நிலையில், தொடர்ந்து நடைபெற்ற மீட்பு பணியின் போது 30 வயது மதிக்கதக்க ஆண் ஒருவரின் சடலமும் மீட்கப்பட்டது.