கிரேக்க நாட்டில் உள்ள கிரீட் தீவில் அதிகாலை 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 83 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
மேலும், எகிப்தின் கெய்ரோ வரையிலும், இஸ்ரேல், லெபனான், துருக்கி மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளிலும் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.