கடந்த 10 ஆண்டுகளில் "மேக் இன் இந்தியா" திட்டம் நாட்டை உலகின் முன்னணி உற்பத்தி நாடாக உருவெடுக்க செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த அறிக்கையில், 2014 முதல் 2024 வரை 66 ஆயிரத்து 700 கோடியே 41 லட்சம் ரூபாய் அளவில் அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது கடந்த 24 ஆண்டுகளில் பெறப்பட்ட அந்நிய நேரடி முதலீடுகளை ஒப்பிடுகையில் 67 சதவீதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.