திமுக எம்பி கனிமொழி தலைமையிலான குழுவினர் சென்ற விமானம் மாஸ்கோ விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு சற்று முன்னர் அங்கு டிரோன் தாக்குதல் நடந்த தால், விமானம் சுமார் 45 நிமிடங்கள் வானில் வட்டமிட்டு பறந்த து.
ஆபரேஷன் சிந்தூர் பற்றி ரஷ்யாவிடம் விளக்குவதற்காக கனிமொழி தலைமையிலான இந்திய குழுவினர் நேற்று புறப்பட்டு சென்றனர்.
அவர்கள் மாஸ்கோ விமான நிலையத்தில் இறங்க திட்டமிட்ட போது அங்கு டிரோன் தாக்குதல் நடந்த தாக தகவல் கிடைத்த து.
இதனால் அவர்களின் விமானம் பலமுறை வானில் வட்டமடித்த பின்னர் பாதுகாப்பாக தரையிறங்கியது.
அங்கு வந்த இந்திய தூதரகத்தினர் குழுவினரை பாதுகாப்பாக ஹோட்டல் அறைகளுக்கு அழைத்து சென்றனர்.அவர்களை இந்திய தூதர் வினய் குமார் உள்ளிட்டோர் பூங்கோத்து கொடுத்து வரவேற்றனர்.