6 
news

ஆவின் பால் பொருட்களை ரேஷன் கடைகளில் விற்க நடவடிக்கை.. பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

ஆவின் பால் பொருட்களை ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

Srini Vasan

ஆவின் பால் பொருட்களை ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார். சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆவின் நெய் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாகவும், சிறிய வகை பாக்கெட்டில் ஆவின் நெய்யை உற்பத்தி செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், ஆவின் பொருள்களை வற்புறுத்தி விற்க வேண்டிய அவசியமில்லை அது பொதுமக்களுடைய ஆப்சன் தான் எனவும் தெரிவித்தார்.