3 
news

துணை முதலமைச்சர் உதயநிதிக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து.. அலைபேசி மூலம் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்த ரஜினி

துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

Srini Vasan

துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.

இதையடுத்து அவருக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் மற்றும் திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.