25 
news

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அறிவிக்க ஆலோசனை.. நவம்பர் 1ம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்க கோரிக்கை

Srini Vasan

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அறிவிக்க, தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரும் 31ம் தேதி வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

அதனைத்தொடர்ந்து நவம்பர் 1ம் தேதி வெள்ளிக்கிழமையும் விடுமுறை அறிவிக்க அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.