42 
news

வெங்கட் பிரபுவை கழட்டிவிட்ட AGS.. 15 வருட கனவு நிறைவேறல.. நயனுடன் மீண்டும் ஜோடிசேரும் VJS

வெங்கட் பிரபுவை கழட்டிவிட்ட ஏஜிஸ் கோட்டில் இருந்து ஆரம்பித்த சலசலப்பு இதுதான் காரணமா லண்டனில் வெளியாகும் ஜி.வி.பிரகாஷ் பாடிய மகளிர் பெருமை கூறும் 'மகளி' பாடல்...15 வருட கனவு ஆனா கடைசி வரைக்கும் இயக்குநர் ஷங்கர் பகிர்ந்த விஷயம்

Srini Vasan

வெங்கட் பிரபுவை கழட்டிவிட்ட ஏஜிஎஸ்தளபதி விஜய வைத்து வெங்கட் பிரபு இயக்கி கடந்த செப்டம்பரில் வெளியான திரைப்படம் கோட். சுமார் ரூ. 400 கோடி பட்ஜெட்டில உருவான இந்த படம் ரூ.450 கோடிக்கும் மேல் வசூலித்து வெற்றி படமா அமைந்தது. இப்படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி படம் தயாரிப்பதில் மட்டுமின்றி, படத்தின் புரொமோஷன்கள்லயும் முக்கிய பங்காற்றிருந்தாங்க. ஆனா, பட புரோமோஷன் சம்பந்தப்பட்ட பணிகள்ல படத்தின் இயக்குநரான வெங்கட் பிரபு இறங்கலன்னும், இதனால ஏஜிஎஸ் தரப்பினர் அவர் மீது அதிருப்தியில் இருந்ததாகவும் சொல்லப்பட்டுச்சு. ஏற்கனவே கோட் படம் சூட்டிங் போது வெங்கட்பிரபுவின் அடுத்த படத்தை ஏஜிஎஸ் தயாரிப்பதாக பேச்சுவார்த்தை நடந்தது. ஆனா இந்த படத்துக்குப் பிறகு ஏஜிஎஸ் , வெங்கட் பிரபுவை கழட்டிவிட்ருப்பதா தகவல் வெளியாகியிருக்கு. சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகப் போகும் படத்தையும் ஏஜிஎஸ் தயாரிப்பதாக இருந்த நிலையில வெங்கட் பிரபு நடந்து கொண்ட விதத்தால இந்த ப்ராஜெக்ட் சத்யஜோதி தயாரிப்பு நிறுவனத்தின் கைவசம் மாறியிருப்பதாக சொல்லப்படுது. இந்த ப்ராஜெக்ட்டுக்கு பின் வெங்கட்பிரபு அஜித்துடன் மீண்டும் இணைவார் என தகவல்களும் உலாவந்தவண்ணம் இருக்கு15 வருட கனவு... இயக்குநர் சொன்ன விஷயம்தமிழ் சினிமாவையும் தாண்டி இந்திய திரையுலகில் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் ஷங்கர். பிரம்மாண்ட படைப்புகளுக்கு பெயர்பெற்ற இவர் தற்போது ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் படத்தை இயக்கியிருக்காரு. இந்த படம் அடுத்த மாதம் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில தற்போது புரமோஷன் பணி விறுவிறுப்பா நடைபெற்று வந்துட்ருக்கு. அந்த வகையில அமெரிக்காவின் டல்லாஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ஷங்கர் அவரது நிறைவேறாத கனவைப் பற்றி பேசியிருப்பது வைரலாகியுள்ளது. அதில் 'மெகாஸ்டார் சிரஞ்சீவியை வைத்து படம் பண்ணணும்னு 15 வருடங்களா கனவு கண்டேன், ஆனா அது நிறைவேறல. பிறகு, மகேஷ் பாபுவோட சேர்ந்து படம் பண்ண திட்டமிட்டு அதுவும் நடக்கல. கொரோனா நோய்தொற்று பரவிவந்த நேரத்துல பிரபாஸ்-உடன் ஒரு படம் பண்றது பத்தி பேசுனேன். ஆனா துரதிர்ஷ்டவசமா, அதுவும் நிறைவேறல'ன்னு தெரிவிச்சிருக்காரு.மகளிர் பெருமை பேசும் ஜி.வி.யின் மகளிதென்னிந்திய திரையுலகுல இசை மற்றும் நடிப்பு என இரண்டு துறைகளில் முக்கிய பங்கு வகிப்பவர் ஜி.வி.பிரகாஷ். இவர் தன்னுடைய 100வது படமா சிவகார்த்திகேயனின் எஸ்கே 25 படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம் ஆகியிருக்காரு. இந்த நிலையில ஜிவி.பிரகாஷ் The Voice Art நிறுவனம் தயாரிப்புல மகளிர் பெருமை கூறும் 'மகளி' என்ற ஆல்பம் பாடலை பாடியிருக்காரு. இவருடன் சேர்ந்து லண்டன் வாழ் ஈழத்துச் சிறுமிகளான வைஷ்ணபி மற்றும் மதுமிதா ஆகியோர் பாடியிருக்காங்க. இந்த பாடல் வருகிற 29-ந் தேதி லண்டன் ஹேய்ஸ் பகுதியில உள்ள கிரிஸ்டல் ஹால் அரங்கத்தில் பிரமாண்ட இசை நிகழ்ச்சியில வெளியிடப்பட இருப்பதாகவும், இந்த பாடலை ஜி.வி பிரகாஷின் தாயாரும், ஏ.ஆர் ரஹ்மானின் சகோதரியுமான ஏ.ஆர்.ரைஹானா அறிமுகம் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கு. இந்த பாடலை பிரிட்டன் எம்.பியான எமிலி டார்லிங்டன் வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது. வெளிச்சத்துக்கு வந்த காதல் பான் இந்தியா அளவுல பிசியான நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரது நடிப்புல கடைசியாக வெளியான திரைப்படம் புஷ்பா 2. ரசிகர்கள் மத்தியில மாபெரும் வெற்றியை பெற்ற புஷ்பா 2 திரைப்படம் வசூல் ரீதியாகவும் மாஸ் காட்டி வந்துட்ருக்கு. இதற்கிடையே ராஷ்மிகா தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை, காதலித்து வருவதாக செய்திகள் உலா வந்துட்ருக்கு. ஆனா அது எதையும் உறுதி செய்யாம ரெண்டுபேரும் ரகசியமாகவே வச்சிருக்காங்க. சரியான நேரத்துல காதலை அறிவிப்பதாக இருவருமே பேட்டிகள்ல தெரிவிச்சிருக்காங்க. இந்த நிலையில ராஷ்மிகா விஜய் தேவர்கொண்டா உடன் ஒன்றாக ஏர்போர்ட் வந்திருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருது. விடுதலை 2 படத்தை பாராட்டிய தனுஷ் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து கடந்த 20ம் தேதி வெளியான திரைப்படம் விடுதலை பாகம் 2. வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் விடுதலை 2 ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வந்துட்ருக்கு. தற்போது வரை ’விடுதலை 2’ உலகளவில ரூ.37 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுது. இந்த நிலையில நடிகர் தனுஷ் விடுதலை 2 குறித்து பாராட்டி சமூக வலைதளப் பக்கத்தில பதிவிட்ருப்பது வைரலாகியுள்ளது. அதில்,"விடுதலை 2 படம் மிகவும் அருமையாகவும் ஈர்க்கக்கூடியதாகவும் உள்ளது. முதல் காட்சியில் இருந்து கடைசி வரை கவர்ந்துருக்கு. இது மாஸ்டர் மேக்கர் வெற்றிமாறனின் சிறப்பான வேலைபாடு, இளையராஜா சாரின் இசை மிகவும் பிடித்திருந்தது. நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள். படக்குழுவிற்கு அன்பான வாழ்த்துகள்” என குறிப்பிட்டிருக்காருமீண்டும் நயனுடன் சேரும் விஜய் சேதுபதிதமிழ் சினிமாவில தற்போது பிஸியாக நடித்து வரும் நடிகர்களில் ஒருவராக விஜய் சேதுபதி உள்ளார். சமீபத்தில இவரது நடிப்பில் வெற்றி மாறன் இயக்கத்தில வெளியான விடுதலை2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில நல்ல வரவேற்பை பெற்றிருக்கு. இதற்கிடையே பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியையும் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வந்துட்ருக்காரு. இந்த நிலையில விஜய் சேதுபதி அடுத்து நடிக்கப்போகும் படம் குறித்து தகவல் வெளியாகியிருக்கு. அதன்படி, விஜய் சேதுபதி அடுத்து ஹரி இயக்கத்தில ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் அந்த படத்தை நயன்தாராவின் Rowdy Pictures நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுது. இது குறித்த பேச்சு வார்த்தை நடைபெற்று வரும் நிலையில் விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுது.சமந்தா குறித்து கீர்த்தி ஓபன் டாக்இயக்குநர் அட்லி இயக்கத்தில விஜய் நடித்து 2016-ல் வெளியான 'தெறி' படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது இந்த படம் ஹிந்தியில் பேபி ஜான் என்ற பெயரில் ரீமேக்காகி வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. அட்லீ இந்த படத்தை தயாரிக்க, வருண் தவான் கீர்த்தி சுரேஷ் இதுல நடிச்சிருக்காங்க. இதற்கிடையே பேட்டி ஓன்றில் பேசிய கீர்த்தி சுரேஷ் சமந்தா குறித்தும் பேபி ஜான் படம் குறித்தும் சில விஷயங்களை பகிர்ந்திருக்காங்க. அதில், " பேபி ஜான் திரைப்படத்தில் ஹிந்தி ரசிகர்களுக்கு ஏற்ப சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தமிழில் வெளியான தெறி படத்தில் சமந்தா அவருடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அவரின் அந்த கேரக்டரை ஏற்று நடிக்க தான் சிறிதும் பயப்படவில்லை. சமந்தாவை போன்று என்னுடைய கேரக்டரும் மிகவும் அழகாக வந்துள்ளது" என்று கூறியிருக்காங்க.அடுத்த த்ரில்லரை இறக்க தயாராகும் ஜீவாபா.விஜய் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு சில வருடங்களுக்கு முன்பே வெளியாகியிருந்தது. ஹாரர் த்ரில்லர் கதை களத்துல உருவாகும் இந்த படத்துல ஜீவாவுடன் சேர்ந்து அர்ஜூன், ராஷி கண்ணா, யோகி பாபு, விடிவி கணேஷ் மற்றும் ரெடின் கிங்ஸ்லி உள்ளிடோர் முக்கிய கதாபாத்திரங்கள்ல நடிச்சிருக்காங்க. வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைச்சிருக்காரு. படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் புதிய படத்தின் தலைப்பு மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கு.அதன்படி --- என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் அடுத்த வருடம் -- மாதம் வெளியாகும்னு அறிவிக்கப்பட்டிருக்கு. ஜீவாவின் பிளாக் படம் Science Fiction த்ரில்லர் பாணியில வெளியாகி வித்தியாசமான அனுபவத்த கொடுத்து வரவேற்ப நிலையில, இந்தப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரிச்சிருக்கு.https://www.youtube.com/embed/iAILPVoa0gc