டெல்லி மற்றும் தேசிய தலைநகர் ஆட்சிப் பகுதியில் நாளுக்கு நாள் காற்றின் தரம் மோசமாகி வருவதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. மக்கள் சுவாசிக்கவே முடியாத வகையில், மாசு படர்ந்து, காற்றில் நச்சுப்புகை காணப்படுவதால் மூச்சு திணறல் உள்ளிட்ட இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். ஆனந்த் விஹாரில் காற்றின் தரக்குறியீடு 381 ஆகவும், தௌலா குவானில் 365 ஆக பதிவாகியிருந்தது. டெல்லியில் பல்வேறு பகுதிகளிலும் கிட்டத்தட்ட இதே நிலை நீடிப்பதால் இங்கு GRAP 3 அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தீபாவளிக்குப் பின்னர் காற்று மாசு கணிசமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.