கள்ளக்குறிச்சியில் விஷ சாராயத்திற்கு 66 உயிர்களை பலிகொண்ட வியாபாரிகள் ஜாமீனில் வெளிவந்து,
மீண்டும் சாராயம் காய்ச்சியதால் மேலும் ஒரு உயிரிழப்பு என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தவறான தகவல் பரப்புவதாக,
தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கமளித்துள்ளது. மேலும்,
குற்றம் சாட்டப்பட்டவர்கள் இருவரும் ஜாமினில் வெளிவரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.