tccl 
news

தங்க மங்கை கார்த்திகாவுக்கு பாராட்டு விழா

தங்கம் வென்ற தங்க மங்கை கார்த்திகாவுக்கு சென்னை கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா

Web Team

ஆசிய கபடி போட்டியில், தங்கம் வென்ற தங்க மங்கை கார்த்திகாவுக்கு சென்னை கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது. NEWS TAMIL 24*7 மற்றும் TCCL சார்பில் நடைபெற்ற விழாவிற்கு NEWS TAMIL 24*7 நிறுவன தலைவர் சகிலன் தலைமை தாங்க, கண்ணன் IPS மற்றும் ராதிகா IPS ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விழாவில் TCCL மற்றும் நியூஸ் தமிழ் சார்பில் கபடி வீராங்கனை கார்த்திகாவுக்கு 3 லட்சம் ரூபாய், பயிற்சியாளர் ராஜுக்கு 2 லட்சம் ரூபாய் பணப்பரிசுடன், கண்ணகி நகர் கார்த்திகா மற்றும் கபடிக் குழுவினர் பயன்பாட்டிற்கென டெம்போ டிராவலர் வாகனம் வழங்கப்பட்டது.