21 
news

அர்ஜென்டினா, சிலி கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... ரிக்டர் அளவில் 7.4 பதிவானதால் சுனாமி எச்சரிக்கை

அர்ஜென்டினா மற்றும் சிலி கடல் பகுதியில் 7 புள்ளி 4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

Srini Vasan

அர்ஜென்டினா மற்றும் சிலி கடல் பகுதியில் 7 புள்ளி 4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து, சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு, பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினா அருகே கடலில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் எதிரொலியாக, சிலியின் மாகல்லனேஸின் கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சக்தி வாய்ந்த நிலநடுக்கம் என்பதால் பேரலைகள் எழுந்திருக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படும் நிலையில், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.