AI கிச்சன் கலாட்டா நியூஸ்தமிழ்24x7
news

கலைஞர்-ஜெயலலிதா TO விஜய்-சங்கீதாவின் AI கிச்சன் கலாட்டா, காஃபி மேக்கிங் அலப்பறை

இல்லாததை இருப்பது போன்றும், இருப்பதை இல்லாதது போன்றும் காட்டும் AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் நீட்சி அடைந்து வர, நிஜ உலகின் பிரபலங்கள் சமையலறையில் காஃபி மேக்கிங் செய்வதை வைத்து பல AI வீடியோக்கள் இன்ஸ்டாவில் வலம் வருகின்றன.

Azhagiri Arumugam

ரசியலில் எதிரும், புதிருமாக இருந்த கலைஞர் - ஜெயலலிதா காம்போ தொடங்கி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - பழக்கடை மூர்த்தி வரை காஃபி போட அடிக்கும் லூட்டியின் AI - Artificial intelligence வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

கலைஞர் - ஜெயலலிதா

இன்ஸ்டாகிராம் முழுவதும்...

சமீபகாலமாக, இன்ஸ்டாகிராமே AI வீடியோக்களின் ஆதிக்கமாக நிரம்பி விட்டது. கற்பனையிலும் நடக்காத நிகழ்வை கூட AI மூலம் உருவாக்கி பிரமிக்க வைக்கிறார்கள். சிறு வயதில் இருந்து நாம் பார்த்த

நகைச்சுவை கதாபாத்திரங்களை வில்லனாக மாற்றுவது, வில்லன் கதாபாத்திரங்களை நகைச்சுவையாக்கி சிரிக்க வைப்பது என AI கொடுக்கும் வீடியோக்கள் படு வைரலாகி வருகின்றன.

இந்த AI வீடியோக்களின் டிரெண்டில் புதிதாக காஃபி மேக்கிங் அலப்பறைகளும் இணைந்திருக்கிறது.

எப்படி இருக்கும்?

அரசியலில் கலைஞரும், ஜெயலலிதாவும் எதிரும், புதிரும் என்பது சின்னக் குழந்தைக்கு கூட தெரியும். அவ்வளவு ஏன் அரசியலில் இருவருக்கும் இடையே இருந்த பகை, தனிப்பட்ட பகையாகவே மாறியது.

இரு பெரும் ஆளுமைகளான எதிர் எதிர் துருவமாக அறியப்பட்ட ஜெயலலிதாவும், கலைஞர் கருணாநிதியும் கிச்சனுக்குள் காஃபி போட சென்றால் எப்படி இருக்கும்? என்ற கற்பனையை கண் முன்னே காட்டும் வீடியோ, வைரலாகி வருகிறது.

வடிவேலு கோவைசரளா

அடுத்ததாக, நகைச்சுவை உலகின் நட்சத்திர ஜோடி தான் வடிவேலுவும் கோவை சரளாவும். கோவை சரளாவும், வடிவேலுவும் கணவன் - மனைவியாக கலக்கிய காமெடிகள் எல்லாம் காலத்திற்கும் சிரிக்க வைக்கும். இந்த ஜோடியின் காஃபி மேக்கிங் இது.

சிம்பு நயன் ஜோடி

காதலித்து பிரிந்த கோலிவுட்டின் ஹாட் ஜோடியான சிம்புவும், நயனும் காஃபி போடச் சென்றால் இப்படி தான் இருக்கும் என காட்டும் AI வீடியோவும் உலா வருகிறது.

அதேமாதிரி, பாகுபாலி நாயகன் அமேந்திர பாகுபலியும் நாயகி தேவசேனாவும் அதே அரண்மணை காஷ்டியூமில் காபி போட்டால் எப்படி இருக்கும்? என்ற காவிய ஜோடியின் வீடியோவும் ஒரு ரவுண்டு அடிக்கிறது.

பாகுபலி தேவசேனா
அஜித் ஷாலினி

இன்றைக்கும் இணைபிரியாத தம்பதியாக உலா வரும் அஜித் - ஷாலினி, சூர்யா - ஜோதிகா, விஜய் தேவரகொண்டா -ராஷ்மிகாவின் கிச்சன் கலாட்டா வீடியோக்களும் ரசிக்க வைத்துள்ளன. ஒவ்வொரு ஜோடிக்கும் ஒவ்வொரு விதமான எக்ஸ்பிரஸ்ஸன் கூட துல்லியமாக உருவாக்கியிருப்பது அசல் வீடியோ மாதிரியே உள்ளது.

சூர்யா ஜோதிகா
ராஷ்மிகா விஜய் தேவரகொண்டா

முதலமைச்சர் விஜய்...

இந்த கிச்சன் கலாட்டா வீடியோக்களிலேயே லைக்ஸ் அள்ளும் வீடியோ என்றால் அது முதலமைச்சர் விஜய்யும், அவரது மனைவி சங்கீதாவும் சேர்ந்து காஃபி போடும் வீடியோ தான். மனஸ்தாபம், விவாகரத்து

வழக்கு என இருவருக்கும் இடையே சில ஆண்டுகளாக மனக்கசப்பு இருந்து வருவதாக கூறப்படுகிறது. ஆனாலும், முதலமைச்சர் விஜய்யும், அவரது மனைவியும் சங்கீதாவும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள்

வீடியோக்களை AI மூலம் கிரியேட் செய்து பரப்பி வரும் நிலையில், அந்த வரிசையில் கிச்சன் வீடியோவும் சேர்ந்திருக்கிறது.

விஜய் சங்கீதா

நம்ம பழக்கடை மூர்த்தியும்...

அடுத்ததாக ஜெயிலர்-2 படம் ரிலீஸ் ஆனதில் இருந்து எங்கு பார்த்தாலும் டிரெண்டிங்கில் இருக்கும் நம்ம பழக்கடை மூர்த்தி அண்ணன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் காஃபி மேக்கிங் செய்யும் வீடியோவில் இருவரது முக பாவனையே வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.

AI உலகின் அடுத்த அப்டேட் என்ன என்பதை பார்க்க இன்ஸ்டாகிராமுடன் இணைந்திருக்க வேண்டியது தான்.

ரஜினி உடன்