பாடி பில்டர் நண்பனை கார் ஏற்றி கொன்ற ஐடி ஊழியர். ஆக்சிடன்ட் ஆகிவிட்டது எனக்கூறி நீலிக்கண்ணீர் வடித்து அனைவரையும் நம்ப வைத்த கொடூரம். காரில் பொருத்தப்பட்டிருந்த DASH கேமராவால் வசமாக சிக்கிய அரக்கன். கிரிக்கெட் போட்டியால் ஏற்பட்ட சிறிய தகராறு கொலையில் முடிந்த பின்னணி என்ன? பாடி பில்டரை கொலை செய்தது எப்படி?
மரத்தில் மோதி அப்பளம் போல் நொறுங்கிய கார்
ஒரு கார், மரத்துல மோதி அப்பளம் மாதிரி நொறுங்கி கிடக்குறதா போலீசுக்கு போன் பண்ணிருக்காங்க பொதுமக்கள். அடுத்து அங்க வந்த போலீசார் விபத்து வழக்கா பதிவு பண்ணி விசாரணையில இறங்கிருக்காங்க. ஆனா, அது விபத்து இல்ல, பயங்கர கொலை அப்டிங்குறது அந்த கார்ல இருந்த டேஷ் கேமரா மூலமா போலீசுக்கு தெரியவந்துருக்கு.
காரை இடித்து விபத்தை ஏற்படுத்திய வீடியோ
கர்நாடக மாநிலம், பெங்களூரு கே.ஆர்.புரம் பகுதியை சேர்ந்தவர் ரோஷன் ஹெக்டே. 37 வயசான இவரு ஒரு ஐடி நிறுவனத்துல சாப்ட்வேட் இன்ஜினியரா வேலை பாத்துட்டு இருக்காரு. வீரசாந்த்ரா பகுதியை சேர்ந்த பாடி பில்டர் பிரசாந்தும் இவரும் நல்ல நண்பர்களா இருந்துருக்காங்க. இவங்க ரெண்டுபேரும் லீவு நாட்கள்ல கிரிக்கெட்டு விளையாடுறது வழக்கம். அப்படிதான், ஹெப்பகோடியில இருக்குற ஒரு கிரவுண்ட்ல கிரிக்கெட் விளையாடிருக்காங்க.
மைதானத்தில் அமர்ந்து மது அருந்திய பிரசாந்த்-ரோஷன்
ரெண்டுபேருமே வேற வேற டீம்ல விளையாண்டப்ப ரோஷன் இருந்த டீம் தொடர்ந்து நாலுமுறை வின் பண்ணிருக்காங்க. அடுத்து போட்டி முடிஞ்சி எல்லாருமே வீட்டுக்குப் போய்ட்டாங்க. அதுக்குப்பிறகு, ஒயின்ஷாப்புக்குப்போய் மது பாட்டில் வாங்கி வந்த ரோஷனும், பிரசாந்தும் கிரவுண்ட்ல உக்காந்தே குடிச்சிருக்காங்க. அப்போ, லேசா போதை தலைக்கு ஏற ஆரம்பிச்சதும் பிரசாந்தை வம்பிழுத்த ரோஷன் உன் அணி நாலுமுறையும் மண்ண கவ்விருச்சுபோல, வாய் மட்டும்தான், போட்டினு வந்துட்டா ஒண்ணுமே இல்லையேனு கிண்டல் பண்ணிருக்காரு. அதோட, இனிமேல் என் அணிக்கு வந்துரு, அப்பதான் சின்ன பசங்ககிட்ட மரியாதை கிடைக்கும், இல்லனா யாரும் மதிக்கமாட்டாங்கனு சொல்லிருக்காரு ரோஷன். இந்த கிண்டலும் கேலியும் ஒருகட்டத்துல ரெண்டுபேருக்குள்ள பயங்கர வாக்குவாதமா மாறிருக்குது.
சடலத்தை போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடிய ரோஷன்
அதனால பொறுமையிழந்த பிரசாந்த், பீர்பாட்டிலால நண்பன் பிரசாந்தோட தலையிலயே அடிச்சிருக்காரு. அப்போ, வலி தாங்க முடியாத ரோஷன் தன்னோட டாடா சபாரி கார்ல ஏறி அங்க இருந்து போக முயற்சி பண்ணிருக்காரு. ஆனா, விடாம துரத்துன பிரசாந்த் ஓடும் காரோட இடதுபுற ஜன்னல் கதவை புடிச்சி தொங்கிட்டே போய்ருக்காரு. அதோட, காரை நிறுத்துறயா இல்லயானு பயங்கரமா கத்திருக்காரு பிரசாந்த். அதனால, பயந்த ரோஷன் காரோட வேகத்த கூட்டிருக்காரு. இரவுநேரம் அப்டிங்குறதால அந்தவழியா பெருசா வாகனங்கள் வராததால் காரும் மின்னல்வேகத்துல பறந்து போயிருந்துருக்குது. பிரசாந்தை எப்படியாவது கார்ல இருந்து தள்ளணும்னு நினைச்ச ரோஷன் சாலையோரத்துல இருந்த மரம், ஒரு பில்டிங் மேல இடிச்சிருக்காரு. அப்போ, சடார்னு மோதி காரோட முன்பக்கம் நொறுங்குனதோட ஜன்னல்ல தொங்கிட்டு இருந்த பிரசாந்த் பலத்த காயமாகி சம்பவ இடத்துலயே உயிரிழந்துட்டாரு. அடுத்து, கார்ல இருந்து இறங்கி ஓடிட்டாரு ரோஷன்.
ரோஷனை சிக்க வைத்த காரின் ”DASH CAM” வீடியோ
அதுக்குப்பிறகு அங்க வந்த போலீசார், விபத்துனு வழக்குப்பதிவு பண்ணதோட பிரசாந்தோட சடலத்தை மீட்டு போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பிட்டாங்க. ஆனா, ரோஷன் தப்பி ஓடுன விஷயமே போலீசாருக்கு தெரியல. அதுக்குப்பிறகு, ரோஷனோட கார்ல பொருத்தப்பட்ருந்த டேஷ் கேமராவ ஆராஞ்சிருக்காங்க. அதுல, பிரசாந்த் ஜன்னலில் தொங்கிட்டு வர்றது, பிரசாந்த் வேணும்னே மரத்துல மோதி பில்டிங்ல இடிச்சி ஆக்சிடெண்ட் பண்றது எல்லாமே பதிவாகி இருந்துச்சு. அடுத்து, தலைமறைவா இருந்த ரோஷனையும் கைது பண்ணிட்டாங்க போலீசார்.