பாலிவுட் நடிகர் கோவிந்தா திடீரென நள்ளிரவு வீட்டில் சுயநினைவின்றி மயங்கி விழுந்ததால் மருத்துமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.1990 களில் பிரபலமாக விளங்கிய நடிகர் கோவிந்தாவிற்கும் அவரது மனைவி சுனிதாவுக்கும் இடையே கருத்து மோதல்கள் நிலவி வரும் நிலையில் இருவரும் தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்நிலையில் மும்பையில் உள்ள தனது வீட்டில் இரவு கோவிந்தா திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு ஜுகுவில் உள்ள கிரிடிகேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதாக அவரது நண்பர் மற்றும் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தர்மேந்திராவை பார்த்த வந்ததிலிருந்து கோவிந்தா உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.