அமெரிக்கா கலிபோர்னியாவின் பாம் ஸ்பிரிங்ஸில் பகுதியில் குண்டு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார்.
அப்பகுதியில் உள்ள கருத்தரிப்பு சுகாதார மருத்துவமனைக்கு வெளியே ஏற்பட்ட குண்டுவெடிப்பில் கட்டடங்களின் ஜன்னல்கள் உடைந்து சேதமடைந்தன.
கட்டடத்தில் தீ பரவ தொடங்கிய நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்நிலையில் குண்டுவெடிப்புக்கு காரணமான மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.