இந்த உலகம் எப்படி இருக்கும், நம்மை சுற்றி இருப்பவர்கள் எப்படி இருப்பார்கள், தன் முகம் கூட எப்படி இருக்கும் என தெரியாது பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு.
இப்படிப்பட்டவர்களின் ஏக்கத்தை தீர்க்க வந்துள்ளது எலன் மஸ்க்-கின் நிறுவனம் கண்டுபிடித்துள்ள புதிய கருவி.
நியூராலிங்கின் அடுத்த முயற்சிதான் தற்போது உலகம் முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. பிறவியிலேயே பார்வை இழந்தவர்கள் அல்லது விபத்து மற்றும் நோய் காரணமாக பார்வை இழந்தவர்களுக்கு மீண்டும் பார்வை கிடைக்கச் செய்வது தான் இந்த Blindsight என்ற சிப்.
நாம் காணும் காட்சி நமது கண்களில் உள்ள லென்ஸ் வழியே உள்ளே சென்று ரெட்டினாவால் எலட்ரிக் சிக்னலாக மாற்றப்படுகிறது. மூளைக்கு கடத்தப்படும் அதில் உள்ள லட்சக்கணக்கான நியூரான்களால் காட்சியாக விரிகிறது. இவை அனைத்தையும் மூளையில் உள்ள Cortex-ஆல் கட்டுப்படுத்தப்படுகின்றன. மனிதர்களில் பெரும்பாலான பார்வை இழப்பு என்பது கண்கள் பாதிப்பு, ரெட்டினா பாதிப்பு போன்றவைகளாலே ஏற்படுகிறது.
எலன் மஸ்க் நிறுவனத்தின் Blindsight கருவி, கண்கள் மற்றும் ரெட்டினா இல்லாமல் பார்வை தருகிறது. அதாவது நாம் பார்ப்பதற்கான அனைத்து விஷயங்களையும் கட்டுப்படுத்தும் Cortexல் ஒரு சிப்பை பொருத்தி, அதை மூளையுடன் இணைக்கிறது. இதனை பார்வை இழந்தவர் அணியும் ஒரு கண்ணாடியில் பொருத்தப்படும் கேமரா மூலம் உள்வாங்கப்படும் காட்சிகள் அனைத்தும், ஒரு மொபைல் கருவி மூலம் Cortexல் பொருத்தப்படும் சிப்-க்கு கடத்தப்பட்டு, மனித மூளை தூண்டப்பட்டு, காட்சிகளாக விரியும்.
இதன் மூலம் கண்கள் இல்லாமலேயே பார்வை பெற முடியும் என்பதை Blindsight நிரூபிச்சிடிச்சு. எலன் மஸ்க்கின் இந்த நவீன கண்டுபிடிப்புக்கு, அமெரிக்காவின் மருந்து மற்றும் நிர்வாக அமைப்பான FDA யுவும் அனுமதி அளித்துள்ளது.